மதுரை: விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் மக்கள் பாதை பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் அமுதா கூறுகையில், ''கிரானைட் ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சகாயம். மதுரை கலெக்டராக இருந்தபோது மலைகளில் இயற்கை வளங்கள் பாதுகாப்பாக இருந்தன. நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட பாதுகாப்பை தன்னிச்சையாக ரத்து செய்த தமிழக அரசு, சமூக நீதி பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. அவரது பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும்'' என்றார்.