கிடப்பில் கிடக்கும் காடுபட்டி ரோடு
கிடப்பில் கிடக்கும் காடுபட்டி ரோடு
கிடப்பில் கிடக்கும் காடுபட்டி ரோடு
ADDED : மே 22, 2025 04:31 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் உள்ள விக்கிரமங்கலம் - காடுபட்டி சாலையில் குறிப்பிட்ட பகுதி பல ஆண்டுகளாக செம்மண் ரோடாகவே உள்ளது.
குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில் வாகன பயணம் செய்வது சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் வாகனங்கள் சறுக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இச்சாலை இருக்கும் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது.அவர்கள் அனுமதி அளிக்காத காரணத்தால் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்புகூட வனத்துறையினர் சாலை அமைப்பதற்காக அளவீடு செய்து கற்களை ஊன்றியுள்ளனர். கூடிய விரைவில் சாலை அமைக்கப்படும்'' என்றனர்