ADDED : பிப் 06, 2024 07:37 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் மத்திய பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி குறைவாக நிதி ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட பொருளாளர் ரமேஸ்வரி, உசிலம்பட்டி வட்டார தலைவர் செல்வி, செயலாளர் சுகுணா, துணைத்தலைவர் கவிதா, சி.ஐ.டி.யு., மாநில பொருளாளர் தெய்வராஜ், மதுரை மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிப்.,16ல் மதுரையில் மறியல், வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.