Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

ADDED : ஜூன் 24, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
மதுரை : 'தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்' என, கைம்பெண்கள் வாழ்வு நிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம், லாஸ் சட்ட மையம் வாழ்வு நிலை சார்பில் கைம்பெண்கள் வாழ்வுநிலை ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மூத்த ஆய்வாளர் ராஜகுமாரி, ஆதரவற்ற பெண்கள் நலச்சங்க தலைவர் அன்புச்செல்வி, துணைச் செயலாளர் சுதா, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க நிர்வாகி கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

ராஜகுமாரி கூறியதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 38 லட்சம் பெண்கள் விதவைகளாக இருந்தனர். இதன்படி பெண்களில் 10.7 சதவிதம் பேர் விதவைகள். இவர்கள் கணவரை இழக்க பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கிய காரணம் மதுபோதை.

38 சதவீத பெண்கள் கணவரை இழக்க காரணம் மதுபோதை. 34 சதவீத பெண்களின் கணவர் நோயால் பாதித்து இறந்துள்ளனர். அந்த நோய்க்கும் மதுபோதை முக்கிய காரணமாக உள்ளது. 21 முதல் 35 வயதுக்குள் 57 சதவீத பெண்கள் விதவையாகி உள்ளனர். 16 மாவட்டங்களில் நடந்த இந்த ஆய்வில் 495 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் பல பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக, கலாசார வழக்கப்படியும் பின் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர வேலையின்மை, கடன் சுமை, கலாசார பாகுபாடு அவர்களின் மாண்பை கலைத்து மேலும் பின்னுக்கு தள்ளுகிறது.

தமிழக அரசு விதவை பெண்களுக்கு வாரியம் துவங்கியதை வரவேற்கிறோம். அவர்களை பாதுகாக்கவும், பொருளாதார வகையில் உதவவும் தனிச்சட்டம் வேண்டும். பெண்கள் விதவைகளாக மாற காரணமான மதுவை தடை செய்ய வேண்டும். அரசு பணியில் 10 சதவீத கைம்பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றார். கலங்கரை மைய இயக்குநர் குழந்தைசாமி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us