Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/முல்லைப் பெரியாறு அணை குறித்த நீரதிகார புத்தக இலக்கிய விழா

முல்லைப் பெரியாறு அணை குறித்த நீரதிகார புத்தக இலக்கிய விழா

முல்லைப் பெரியாறு அணை குறித்த நீரதிகார புத்தக இலக்கிய விழா

முல்லைப் பெரியாறு அணை குறித்த நீரதிகார புத்தக இலக்கிய விழா

ADDED : ஜூன் 24, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
மேலுார் : மேலுாரில் விஜயா பதிப்பகம், டைல்ஸ் பார்க், துருவம் குழுமத்தினர் இணைந்து, முல்லை பெரியாறு அணையை பென்னிகுவிக் உருவாக்கியது குறித்து நீரதிகாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தக இலக்கிய விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

விஜயா பதிப்பகம் வேலாயுதம் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கலெக்டர்கள் கருணாகரன், ராஜேந்திரன், முல்லை பெரியாறு வைகை பாசன சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் குறிஞ்சிகுமரன், மாதவன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக பென்னி குவிக் படத்திற்கு விவசாயிகள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:தமிழக கிராமபுற இளைஞர்கள் சோம்பேறிகளாக, குடிமகன்களாக மாறிகொண்டிருக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரனம். நுாறு நாள் வேலை திட்டத்தின் மூலம் இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறுவதோடு சம்பளத்தை டாஸ்மாக்கில் கொடுத்து குடிமகன்களாக மாறி விடுகின்றனர்.

இந்நிலை மாற பள்ளி, கல்லூரிகளில் இருந்து நமது பண்பாடு வீரம், வரலாறு, தெரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றை சொல்லக்கூடிய தார்மீக கடமையும், பொறுப்பும் எழுத்தாளருக்கு உண்டு. வரலாற்று படைப்பு தான் நீரதிகார புத்தகம். இப் புத்தகம் 1500 பக்கம் கொண்டது. 9 ஆண்டுகள் போராடி கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை. அணைபற்றியும், அணையின் வரலாறு பற்றியும் புத்தகத்தில் எழுத்தாளர் வெண்ணிலா தெளிவாக எழுதியுள்ளார்.

லண்டன், சென்னை ஆவண காப்பகங்களில் இருந்து கிடைத்த ஆவணங்களை கொண்டு இப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகம் வரலாற்று காவியம். 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவதற்காக அணையை கட்டியவர் கர்னல் பென்னிகுவிக். அணை குறித்த வரலாற்று உண்மைகளை வெளிகொண்டு வந்த புத்தகம் தான் நீரதிகாரம் என்றார்.

கலெக்டர் ராஜேந்திரன், பேச்சாளர் பாரதி பாஸ்கர், விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர் வெண்ணிலா, பேராசிரியர் லோகமாதேவி உள்ளிட்டோர் நீரதிகாரம் புத்தகத்தில் அணை கட்டுவதன் நோக்கம், கட்டுவதற்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். அணையினால் பயனடைய கூடியது இப் பகுதி என்பதால் அணையின் வரலாறு குறித்து மக்கள் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது கேரளா ஒரு அணை கட்ட முயற்ச்சிப்பதன் மூலம் ஒரு மலிவான அரசியல் செய்து வருகிறது. முன்னோர்கள் உயிரையும் உடலையும் கொடுத்து பாடுபட்டு கட்டிய அணை என்பதால் என்றைக்குமே நமது உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்றனர். துருவம் குழுமத்தின் நிறுவனர் ப்ரீத்தி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us