மகசூல் அதிகரிக்க துத்தநாக சல்பேட்
மகசூல் அதிகரிக்க துத்தநாக சல்பேட்
மகசூல் அதிகரிக்க துத்தநாக சல்பேட்
ADDED : ஜூலை 19, 2024 05:57 AM
மதுரை : நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு துத்தநாக சல்பேட் உரமிட வேண்டும் '' என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
ஒரே நிலத்தில் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்வதால், எப்போதும் தண்ணீர் தேங்கி கரையா உப்புகளின் அளவு அதிகரித்து துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுகிறது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால் பயிருக்கு துத்தநாக சத்து கிடைக்க இயலாத நிலை ஏற்படும்.
துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால் பயிர் வளர்ச்சி குன்றி இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகளாகி காய்ந்துவிடும். துார்களின் எண்ணிக்கை குறைவதோடு மலட்டுத் தன்மையுடன் காணப்படும். இதனால் விளைச்சல் குறையும்.
துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணுாட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து பரம்படித்த பின், நடவுக்கு முன் சீராக வயலில் துாவ வேண்டும். அடிஉரமாக துத்தநாக சல்பேட் இடாவிட்டால் பயிர் நட்ட 20, 30 மற்றும் 40 வது நாளிலும் குறுகிய கால பயிருக்கு 30,40, 50வது நாளில் 0.5 சதவீத திரவமாக இலையில் தெளிக்கவேண்டும்.
களி அதிகம் உள்ள சுண்ணாம்பு இல்லாத, சிறிதளவு களர் உள்ள நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை மற்ற ரசாயன உரங்களுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும். அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் ஜிப்சம் மற்றும் ஜிங்க் சல்பேட் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.