ADDED : ஜூன் 12, 2024 12:27 AM
மேலுார் : கேசம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கனவாடி மையம் உள்ளது.
இப் பள்ளிக்கு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஜீவா தலைமையில் மாணவர்களுக்கு தேவையான மேஜை, மின்விசிறி, மாணவர்கள் அமர பாய் உள்ளிட்ட பொருட்களை தலைமையாசிரியர் சமுனா வஜ்ருத் பேகம், அங்கன்வாடி மைய பொறுப்பாசிரியர் சங்கீதா பெற்று கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.