Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 12

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 12

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 12

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 12

ADDED : ஜூன் 12, 2024 12:27 AM


Google News
கோயில்

வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், 3ம் நாள் விழா, சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, யாழி வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஞானேஸ்வரி ப்ரவசனம்: நிகழ்த்துபவர்கள் - ரகுநாத்தாஸ் மஹாராஜ், விஸ்வாஸ் யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:00 மணி, ஹரி கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - துகாராம் கணபதி மகாராஜ், இரவு 7:30 மணி.

கண்டேன் தேவியை - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

காந்தியடிகளை அறிந்து கொள்வோம் - பத்து நாள் படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய காப்பாட்சியர் நடராஜன், சிறப்புரை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை இளங்கலை மாணவர்கள், காலை 11:00 மணி.

இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி: தான்யா, வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருந்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பல் பரிசோதனை முகாம்: நியூ சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், ஊமச்சிக்குளம், பரிசோதிப்பவர்: டாக்டர் சகாய ஜென்ஸி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் சிறந்த படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us