/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுகர்வோர் ஆணைய உறுப்பினர் நியமன வழக்கு நுகர்வோர் ஆணைய உறுப்பினர் நியமன வழக்கு
நுகர்வோர் ஆணைய உறுப்பினர் நியமன வழக்கு
நுகர்வோர் ஆணைய உறுப்பினர் நியமன வழக்கு
நுகர்வோர் ஆணைய உறுப்பினர் நியமன வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 12:27 AM
மதுரை : மதுரை வழக்கறிஞர் காஜா முகைதீன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் கிளை மதுரையில் உள்ளது. வழக்குகளை விசாரிக்க ஒரு தலைவர், 2 நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாராத உறுப்பினர்கள் இருப்பது அவசியம். உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. தென் மாவட்ட நுகர்வோர் வழக்குகள் தேங்குகின்றன. தமிழக சிவில் சப்ளை, கூட்டுறவுத்துறை கமிஷனர் மற்றும் செயலருக்கு மனு அனுப்பினேன். உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு தமிழக தலைமைச் செயலர், சிவில் சப்ளை, கூட்டுறவுத்துறை கமிஷனர் மற்றும் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தது.