/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வசதியற்ற ரோடுகளால் தள்ளாடும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா: 'சிட்கோ' சாலைகள் வசதியற்ற ரோடுகளால் தள்ளாடும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா: 'சிட்கோ' சாலைகள்
வசதியற்ற ரோடுகளால் தள்ளாடும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா: 'சிட்கோ' சாலைகள்
வசதியற்ற ரோடுகளால் தள்ளாடும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா: 'சிட்கோ' சாலைகள்
வசதியற்ற ரோடுகளால் தள்ளாடும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா: 'சிட்கோ' சாலைகள்
ADDED : ஜூலை 03, 2024 05:52 AM

திருமங்கலம் : திருமங்கலத்தில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி பொருள்கள் உற்பத்தியாகும் 'சிட்கோ' தொழிற் பேட்டையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் தள்ளாடிச் செல்கின்றன.
இத்தொழிற்பேட்டை 530 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டதாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு சிறிதும் பெரிதுமாக 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இத்தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி பொருள்கள் உற்பத்தியாகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1500 கோடிக்கும் மேல் நேரடி வரி வருவாய் கிடைக்கிறது.
இந்த தொழிற்பேட்டைக்குள் 11 கி.மீ., தொலைவுக்கு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அனைத்து ரோடுகளும் சேதமடைந்து உள்ளன. இதனை எந்த அரசும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. . அன்றைய காலத்திற்கேற்ப சாதாரண வாகனங்கள் செல்லும் ரோடுகள் அமைக்கப்பட்டன. அவை தற்போது கனரக வாகனங்கள் செல்லும் அளவு தகுதியின்றி உள்ளன.
மேலும் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன. இதனால் சிட்கோவிற்குள் 'லோடுடன்' செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் ஏறி, இறங்கி தள்ளாடிச் செல்கின்றன. நமக்கு நாமே திட்டத்தில் இந்த ரோடுகளை புதுப்பிக்க முயற்சி எடுத்து ஓராண்டுக்கும் மேல் ஆகியும், ரோடு அமைக்க இன்றுவரை ஒரு ஜல்லிக்கல் கூட எடுத்து வைக்கவில்லை. அரசுக்கு பெரும் வருமான வாய்ப்பாக இருக்கும் இந்த தொழிற் பேட்டையை உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.