Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காயாய் கசந்தாலும் காசாய் இனிக்கும் வேம்பு

காயாய் கசந்தாலும் காசாய் இனிக்கும் வேம்பு

காயாய் கசந்தாலும் காசாய் இனிக்கும் வேம்பு

காயாய் கசந்தாலும் காசாய் இனிக்கும் வேம்பு

ADDED : ஜூலை 03, 2024 05:53 AM


Google News
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார கிராமங்களில் வேப்பம் பழங்களை சேகரித்து ஏராளமான மூதாட்டிகள் வருமானம் ஈட்டுகின்றனர்.

வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் வேப்ப மரங்களில் காய்கள் காய்க்கும். ரோட்டோரம், பூங்காக்கள், பொது இடங்களில் உள்ள வேப்ப மரங்களில் பழுத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன. அவற்றை பலர் சேகரித்து வெயிலில் காய வைத்து வேப்பங்கொட்டையை பிரித்தெடுக்கின்றனர். பின் கிலோ ரூ. 60 முதல் ரூ. 110 வரை, காய்ந்த தோலுடன்கூடிய வேப்பங்கொட்டை ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்கின்றனர். இவ்வகையில் இம்மூன்று மாதங்கள் வேப்பம் பழங்களால் கணிசமான வருவாய் ஈட்டுகின்றனர்.

கடந்தாண்டு மரங்களில் பூக்கள் அதிகளவில் இல்லாததால் பழங்கள் மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்தது.

இந்தாண்டு அதிகளவில் வேப்பம் பழங்கள் கிடைக்கிறது. வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு எடுப்பதற்கு வியாபாரிகளும், இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளும் அவற்றை வாங்கிச் செல்வதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us