ADDED : ஜூலை 03, 2024 05:52 AM
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் பள்ளிகளுக்கிடையேயான மாநில ஐவர் கால்பந்து போட்டிகள் ஜூலை 11, 12 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது.
கல்லுாரி நிறுவனர் நாராயணன் செட்டியார் நினைவு கோப்பைக்கான இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறும்.
ஒரு பள்ளியில் இருந்து ஒரு அணி மட்டுமே பங்கேற்கலாம். முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணியினருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்கள், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு பதக்கம், சான்றிதழ், போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங் கப்படும்.
அனைத்து வீரர்களுக்கும் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.
முன்பதிவிற்கு 90803 61863 ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் சந்திரன் தெரிவித்தார்.