ADDED : ஜூன் 11, 2024 06:43 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தின் ஆரம்ப பகுதியில் வழிகாட்டி அறிவிப்பு இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள், பக்தர்கள் அவதியுறுகின்றனர்.
திருப்பரங்குன்றம் ஊருக்குள் செல்பவர்களும், டவுன் பஸ்களும் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மற்ற வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றன. ஹார்விபட்டி பகுதியில் பாலத்தின் நுழைவாயில் 'திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் வழி' என்ற வழிகாட்டி போர்டு இல்லை. அதேபோன்று சர்வீஸ் ரோட்டில் சென்றால் எந்தெந்த பகுதிக்கு செல்லலாம் என்ற அறிவிப்பும் இல்லை. இதனால் கோயிலுக்கு வரும் வெளியூர்காரர்கள் பாலம் முன்பு வாகனங்களை நிறுத்தி விசாரிக்கும் நிலை உள்ளது. பலர் சர்வீஸ் ரோட்டில் பல கி.மீ., துாரம் சென்று விசாரித்து மீண்டும் திரும்பி வருகின்றனர். பாலத்தின் நுழைவு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கண்ணுக்கு தெரியாத வகையில் அறிவிப்பு போர்டு இருந்தது. அதுவும் தற்போது அகற்றப்பட்டு விட்டது.