ADDED : ஜூன் 11, 2024 06:42 AM
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி 'பசியில் இருந்து விடைகொடு' அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.
தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். கவுன்சிலர் விஜயா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கீதா, எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜ் ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் அரவிந்தன், கார்த்திகேயன், மீனாட்சிசுந்தரம், நாகராஜன் பங்கேற்றனர்.