ADDED : மார் 12, 2025 01:18 AM
மேலுார்; திருவாதவூர் திரவுபதை அம்மன் கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று அர்ஜுனனுக்கும், திரவுபதை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் மேலுார், உலகு பிச்சன்பட்டி பகுதிகளில் இருந்து பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்ச் 16 அம்மன் கூந்தல் விரிப்பு, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் இடம்பெறும். மார்ச் 18ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.