ADDED : ஜூன் 22, 2024 05:30 AM
மதுரை: மதுரையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்பில் மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சியை திட்ட சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத் துவக்கினார்.
சி.இ.ஓ., கார்த்திகா வரவேற்றார். அடிப்படை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. 18 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 250 பேர் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணமுருகன் தொகுத்து வழங்கினர்.