ADDED : ஜூன் 22, 2024 05:31 AM
மதுரை: மதுரை தெற்கு ரயில்வேயில் பயணிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது.
கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். பயணத்தின் போது இடையூறு இன்றி பயணிகள் பயணிப்பது, ஸ்டேஷன் சுகாதாரத்தை மேம்படுத்துவது, 'பார்க்கிங்'கை பராமரிப்பது, இரவில் ரயில்கள் நிற்கும் ஸ்டேஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதுநிலை பிரிவு வணிக மேலாளர் கணேஷ்பாபு, உதவி மேலாளர் பாலமுருகன், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.