ADDED : ஜூலை 30, 2024 05:44 AM
கோயில்
ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, காலை 9:30 மணி.
ஆடி உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.
48ம் நாள் மண்டல பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், கோச்சடை, கோ பூஜை, காலை 10:45 மணி, ஹோமம், காலை 11:00 மணி, அபிஷேகம், திருப்புகழ் பாராயணம், பஜனை, மதியம் 12:00 மணி, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மாலை 6:00 மணி, பரதநாட்டியம், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
காந்திநிகேதன் ஆசிரம நிறுவனர் வேங்கடாசலபதி 115 வது பிறந்தநாள், ஆசிரமத்தின் 84 வது ஆண்டு விழா: ஆசிரம வளாகம், டி.கல்லுப்பட்டி, தலைமை: தலைவர் ரகுபதி, சிறப்பு விருந்தினர்: கலசலிங்கம் பல்கலை வேந்தர் ஸ்ரீதரன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், வரலாற்றாசிரியர் ராஜேந்திரன், காலை 10:00 மணி.
டோல்கேட்டை அகற்றக்கோரி பந்த், முற்றுகை போராட்டம்: டோல்கேட், கப்பலுார், ஏற்பாடு: டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, காலை 9:00 மணி.
மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட நீதிபதி அனுராதா, ஏற்பாடு: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, காலை 9:30 மணி.
உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, பங்கேற்பு: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
இசைக் கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு: அபிஷேக் ரகுராம், வயலின்: பாஸ்கர், மிருதங்கம்: கிஷோர் ரமேஷ், ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
ஹிந்தி மொழி பேச்சு பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
'கோவை பாடுக' - பேருரை: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: முன்னாள் மாநில தகவல் கமிஷனர் சாரதா நம்பி ஆரூரன், ஏற்பாடு: கருமுத்து தியாகராஜச் செட்டியார் நினைவு அறக்கட்டளை, மாலை 4:30 மணி.
உச்சரிப்பை மேம்படுத்தும் பயிற்சி: சவுராஷ்ட்ரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீநிவாசன், பொறுப்பு தலைவர் ராம்பிரசாத், செயலாளர் குமரேஷ், பயிற்சி அறிமுகவுரை: விக்னேஷ், ஏற்பாடு: ஆங்கில துறை, மதியம் 2:30 மணி.
வாகை விழா: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, தலைமை: கல்லுாரி செயலாளர் அசோக், முதல்வர் விசுமதி, சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி உதவிப் பேராசிரியர் பூங்கொடி, ஏற்பாடு: தமிழ் ஆய்வியல் துறை, காலை 10:30 மணி.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் போக்குகளை ஆராய்தல் - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: விஸ்வெல் போர்ட் டெக்னாலஜிஸ் இயக்குனர் திருஞானசம்பந்தன், காலை 10:30 மணி.
இன்னர் ஹார்மோனி - யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், முன்னிலை: முதல்வர் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்: வைஷ்ணவி, ஏற்பாடு: மகளிர் மேம்பாட்டுக்குழு, காலை 10:00 மணி.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு: விவேகானந்தர் கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: மதுவிலக்கு டி.எஸ்.பி. சிவசுப்பு, டாக்டர் ரிஜின், செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், ஏற்பாடு: இந்திய செஞ்சிலுவை சங்கம், மதுரை, காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
விளையாட்டு
கருப்பாயூரணி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் டெனிகாய்ட் போட்டி, சமயநல்லுார் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு கபடி போட்டி: ரேஸ் கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 8:30 மணி.