/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அசுவமாநதியில் ஷட்டரால் கண்மாய்கள் பாதிப்பு; நீர்வளத்துறை மீது விவசாயிகள் புகார் அசுவமாநதியில் ஷட்டரால் கண்மாய்கள் பாதிப்பு; நீர்வளத்துறை மீது விவசாயிகள் புகார்
அசுவமாநதியில் ஷட்டரால் கண்மாய்கள் பாதிப்பு; நீர்வளத்துறை மீது விவசாயிகள் புகார்
அசுவமாநதியில் ஷட்டரால் கண்மாய்கள் பாதிப்பு; நீர்வளத்துறை மீது விவசாயிகள் புகார்
அசுவமாநதியில் ஷட்டரால் கண்மாய்கள் பாதிப்பு; நீர்வளத்துறை மீது விவசாயிகள் புகார்
ADDED : ஜூலை 30, 2024 02:10 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியின் இரண்டு பகுதிகளை வளமாக்கிய அகவமாநதியின் குறுக்கே ஒரு பிரிவில் தடுப்பணையுடன் ஷட்டர்அமைத்து, அடுத்த பிரிவுக்கு தண்ணீர் திருப்பிவிட்டுள்ள நீர்வளத்துறையால் 5க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
உசிலம்பட்டியின் மேற்கே செட்டியபட்டி கணவாய் பகுதியில் அசுவமாநதி உற்பத்தியாகிறது. இந்நதி 12 கி.மீ., துாரத்தில் கருக்கட்டான்பட்டியில் 2 ஆக பிரிந்து ஒரு பகுதி கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி, பூதிப்புரம், ஆனையூர் சின்ன, பெரிய கண்மாய்கள், வாலாந்துார் கண்மாய்க்கு செல்லும்.
மற்றொரு பிரிவு நல்லுத்தேவன்பட்டி, வகுரணி கண்மாய்களுக்கு பாசனம் தந்து, பண்ணைப்பட்டி, புத்துார் கண்மாய்கள் வழியாக ஏ.புதுப்பட்டி அருகே வாலாந்துார், ஆரியபட்டி கண்மாய்கள் வரை செல்கிறது.
இந்த 10 கண்மாய்களுக்கும் நீராதாரமே அசுவமாநதிதான். சில ஆண்டுகளுக்கு முன்பாக நதிநீர் கருக்கட்டான்பட்டி, நல்லுத்தேவன்பட்டிக்கு பிரியும் இடத்தில் கருக்கட்டான்பட்டி கண்மாய்க்கு செல்லும் பகுதியில் மட்டும் தடுப்பணை கட்டி ஷட்டர் அமைத்தனர்.
அதுமுதல் கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி கண்மாய் வரிசையில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்து போனது.
மாசாணம், கருக்கட்டான்பட்டி: மேற்கே சிறிதளவு மழை பெய்தால் கூட முதலில் கருக்கட்டான்பட்டி கண்மாய்க்குத்தான் தண்ணீர் வரும். நீர்வளத்துறையினர் நதியின் குறுக்கே முழுமையான நதிக்கும் தடுப்பணை அமைக்காமல் கருக்கட்டான்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் பிரிவை மட்டும் தடுத்து குறுகலானஷட்டரும் அமைத்துள்ளனர். இதனால், கருக்கட்டான்பட்டி கண்மாய் நிரம்பியபின் நல்லுத்தேவன்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் நிலை மாறிவிட்டது.
தண்ணீர் வரவேண்டிய ஷட்டர் பகுதி வெள்ள நீரால் இழுத்துவரப்படும் குப்பை அடைத்து விடுவதால் தண்ணீர் நேராக நல்லுத்தேவன்பட்டி கண்மாய்க்குச் செல்கிறது. இது குறித்து பலமுறை நீர்வளத்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இதே ஆறு எ.புதுப்பட்டிக்கு அருகே வாலாந்துார், ஆரியபட்டி கண்மாய்களுக்கு பிரிகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஊர் மக்களும் தொடர்ந்து இந்த தண்ணீருக்காக தகராறு செய்தனர். அப்போது இருந்த நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்றை இரண்டாக பிரித்து இரண்டு பக்கமும் தண்ணீர் சரியான அளவில் செல்வது போல பிரித்துக் கொடுத்துள்ளனர்.
தற்போது உள்ள அதிகாரிகள் கருக்கட்டான்பட்டி செல்லும் நீர்வரத்து பகுதிக்கு மட்டும்தடுப்பணை அமைத்துஉள்ளது திட்டமிட்டு வஞ்சனை செய்தது போல உள்ளது. வரும் மழைக்காலத்திற்குள் இந்த தடுப்பணையை அகற்றி சரியானபடி இரண்டு பிரிவுகளிலும் தண்ணீர் கிடைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.