/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டைடல் பார்க் வழக்குஉயர்நீதிமன்றம் தள்ளுபடி டைடல் பார்க் வழக்குஉயர்நீதிமன்றம் தள்ளுபடி
டைடல் பார்க் வழக்குஉயர்நீதிமன்றம் தள்ளுபடி
டைடல் பார்க் வழக்குஉயர்நீதிமன்றம் தள்ளுபடி
டைடல் பார்க் வழக்குஉயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மார் 14, 2025 05:46 AM
மதுரை, மார்ச் 14-மதுரை மயில்சாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாட்டுத்தாவணியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. அது நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட பகுதி. டைடல் பார்க் கட்டுமானத்திற்கு அனுமதிக்கக்கூடாது. தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.‛அது குப்பைக் கிடங்கு மற்றும் காலி இடம் என 1981 ல் வகைமாற்றம் செய்யப்பட்டது,' என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.