ADDED : மார் 14, 2025 05:45 AM
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க வளாகத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார்.
திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும் என்னும் தலைப்பில் சென்னை வலைத்தமிழ் நிறுவனர் பார்த்தசாரதி பேசுகையில்,'' 62 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் சிந்தியில் மட்டும்தான் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் 102 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது” என்றார். பட்டிமன்ற பேச்சாளர் ராமநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கவுரவ பேராசிரியர் ரேணுகாதேவி உட்பட பலர் பேசினர். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.