ADDED : ஜூன் 23, 2024 04:08 AM
மேலுார்: ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா பள்ளியில் நுால் வெளியீட்டு விழா, அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் தலைமை வகித்தார். விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சீதாராமன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாகராஜன், சட்ட ஆலோசகர் ராதா, தாளாளர்கள் சுதா, பாக்கியா, கல்வி ஆலோசகர் நாகேஸ்வரன், முதல்வர் கண்ணன் ஆகியோர் பள்ளியின் 20ம் ஆண்டு நுாலை வெளியிட்டனர். மதுரையின் சிறப்பினை மையப்படுத்தி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.