/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்
ADDED : ஜூன் 23, 2024 04:08 AM
மதுரை: 'தி.மு.க., அரசின் அலட்சிய போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மரணம் அடைந்ததை கண்டிப்பதாக' அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) தேசிய மாணவர் அமைப்பு மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கண்டனம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் நியாயம் கிடைக்க அவர்களோடு ஏ.பி.வி.பி., உறுதுணையாக நிற்கும். கவர்னர் ரவியும் உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.