ADDED : ஜூன் 23, 2024 04:07 AM
பாலத்தில் கார் மோதி பலி
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் செய்யூர் வெள்ளி 43. நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் மதுரை - நத்தம் பாலத்தில் ஒருவழிப்பாதையில் வந்தபோது எதிரே வந்த கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிங்கப்பூருக்கு இன்று செல்ல இருந்தவர் பலி
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி அழகு 40. சிங்கப்பூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக இருந்தார். நேற்று முன்தினம் மனைவி பவித்ராவின் சொந்த ஊரான கோவில்பட்டியில் நடந்த திருவிழாவில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 2:00 மணிக்கு டூவீலரில் திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை. தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில் திருச்சி - - திருநெல்வேலி அரசு பஸ் மோதி இறந்தார். எஸ் ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார். அழகு இன்று (ஜூன் 23) சிங்கப்பூர் செல்ல டிக்கெட் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.