ADDED : ஜூன் 08, 2024 06:13 AM

திருமங்கலம் : திருநெல்வேலி மாவட்ட வேன் டிரைவர் அருணாச்சலம் 32, நேற்று முன்தினம் இரவு பயணிகளை மதுரையில் இறக்கிவிட்டு மீண்டும் திருநெல்வேலி திரும்பினார்.
அதிகாலை 2:00 மணிக்கு திருமங்கலம் பைபாஸ் ரோட்டில் செங்குளம் பிரிவு அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி 'யு டர்ன்' அடித்து மதுரை ரோட்டை நோக்கி திரும்பியது.
அத்துடன் எதிர் திசையில் இருந்த மரத்தில் மோதிய வேன், 20 அடி கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சிறு காயங்களோடு தப்பினார்.