ADDED : ஜூன் 08, 2024 06:13 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பரவலாக நல்லமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் 577.68 மி.மீ., அளவுக்கு பரவலாக மழை பெய்துள்ளது. மழையளவு விவரம் (மி.மீ.,யில்) வருமாறு:
விமான நிலையம் 41.20, விரகனுார் 26.40, மதுரை வடக்கு 42.20, சிட்டம்பட்டி 25.20, இடையபட்டி 29, கள்ளந்திரி 15.20, தல்லாகுளம் 42, மேலுார் 9, புலிப்பட்டி 11.20, தனியாமங்கலம் 11, சாத்தையாறு அணை 26, மேட்டுப்பட்டி 50.20, ஆண்டிப்பட்டி 12.40, சோழவந்தான் 15, வாடிப்பட்டி 11, உசிலம்பட்டி 5, குப்பணம்பட்டி 3, கள்ளிக்குடி 4.08, திருமங்கலம் 21.60, பேரையூர் 67, எழுமலை 22.80, பெரியபட்டி 47.20.
பேரையூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியற் கல்லுாரி செல்லும் வழியில் இரவு நேரம் ஒரு மரம் வேரோடு சாய்ந்ததில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.
அணைகளில் நீர்மட்டம்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடி(மொத்த உயரம் 152 அடி). அணையில் 2412 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 210 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.80 அடி.(மொத்த உயரம் 71 அடி). அணைக்கு வினாடிக்கு 232 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 9 அடி. 9 (மொத்த உயரம் 29 அடி). அணையில் 6.41 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1 கனஅடி தண்ணீரே வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.