/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம் விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம்
விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம்
விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம்
விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம்
ADDED : ஜூன் 08, 2024 06:12 AM
மதுரை : தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மதுரை விராதனுாரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம் உருவாக்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். அப்பள குழும ஆலோசகர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜயன், இணைச் செயலாளர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், அறிவு மணி, சந்துரு, மதுரை சிட்கோ மேலாளர் பிரான்சிஸ் நோயல் கலந்து கொண்டனர்.
திருமுருகன் கூறியதாவது: சிந்தாமணி, அனுப்பானடி, ஜெய்ஹிந்துபுரத்தில் 546 சிறு, குறு, நடுத்தர அப்பளம் தயாரிக்கும் கம்பெனிகள் செயல்படுகின்றன.
பெரும்பாலும் வீடுகளில் குடிசைத் தொழிலாகத்தான் தயாரிக்கப்படுகிறது.
அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உதவும் வகையில் விராதனுாரில் 2 ஏக்கரில் ஒருங்கிணைந்த அப்பள தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளோம்.
உளுந்தம் பருப்பை சேகரிப்பது முதல் மாவாக்கி அப்பளமாக தயாரித்து பேக்கிங் செய்வது வரை தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு ரூ.12.5 கோடி செலவாகும். சிட்கோ, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இதற்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது சிட்கோவிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம் என்றார்.