ADDED : ஜூன் 08, 2024 06:14 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் பெய்த மழையால் பருத்தி பஞ்சு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இப்பகுதியில் கிணற்றுப் பாசனத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக பருத்தி மகசூல் கொடுத்து வருகிறது.
பருத்திப்பஞ்சு கிலோ ரூ. 75 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் மழையால் பஞ்சு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது விவசாயிகளிடமிருந்து ரூ. 40 முதல் ரூ.45 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.