/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொதுப்பணித்துறை வளாகத்தில் இடியுதாம்... விழுகுதாம்... பொதுப்பணித்துறை வளாகத்தில் இடியுதாம்... விழுகுதாம்...
பொதுப்பணித்துறை வளாகத்தில் இடியுதாம்... விழுகுதாம்...
பொதுப்பணித்துறை வளாகத்தில் இடியுதாம்... விழுகுதாம்...
பொதுப்பணித்துறை வளாகத்தில் இடியுதாம்... விழுகுதாம்...
ADDED : ஜூன் 23, 2024 04:17 AM

மதுரை: மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 50 ஆண்டுகளை கடந்த கட்டடங்கள் அவ்வப்போது பெய்யும் சிறுமழைக்கு ஆங்காங்கே இடிந்து விழுந்து பயமுறுத்துகிறது.
இந்த வளாகத்தில் உள்ள குண்டாறு வடிநில கோட்ட அலுவலகம், கனிமவளத்துறை அலுவலகத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. தரைப்பகுதி கான்கிரீட் பெயர்ந்து காணப்படுவதுடன் சுவர் முழுவதும் விரிசலாக உள்ளது.
மழை பெய்யும் போதெல்லாம் சுவர் வழியாக மழைநீர் கசிந்து பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக போர்டிகோவும் முதல்மாடி கட்டடமும் இணையும் பகுதியில் விரிசல் அதிகமாக உள்ளது. துாண்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
நேற்று முன்தினம் கட்டடத்தின் போர்டிகோ பகுதியின் கூரை மதிய நேரத்தில் பெயர்ந்து விழுந்தது. அந்த நேரம் யாரும் நடந்து செல்லாததால் தப்பினர். கரணம் தப்பினால் மரணம் என்பது போல நித்தமும் இந்த வழியை பணியாளர்கள் கடந்து செல்கின்றனர். இதுவரை அவ்வப்போது 'ஒட்டு' போட்டு கான்கிரீட், சிமென்ட் கலவை பூசியும் பழைய கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதை நிறுத்த முடியவில்லை. 50 ஆண்டுகளை கடந்த கட்டடத்தை பராமரிப்பு செய்வது என்பது கண்துடைப்பான வேலையாக மாறிவிடும்.
வளாகத்தில் மிகவும் பாழடைந்த கட்டடங்களை மறு ஆய்வு செய்து அவற்றை சீரமைக்க முடியாவிட்டால் இடித்து விட்டு புது கட்டடம் கட்டுவதே தீர்வாக அமையும்.