/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை
ADDED : ஜூலை 10, 2024 05:17 AM
மதுரை : ''அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்'' என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரையில் வெங்கடேசன் எம்.பி., யிடம் விவசாயிகள் வழங்கினர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில கவுரவ தலைவர் ராமன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மணிகண்டன், அருள், துரைசாமி, அழகுசேர்வை, மாரிச்சாமி ஆகியோர் மனு அளித்தனர்.
ராமன் கூறியதாவது: ஜூலை 21 ல் மத்திய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து குறைந்தபட்ச ஆதார விலைக்கு புதிய சட்டம் கொண்டு வர வலியுறுத்தினோம். இரண்டு ஆண்டுகளாகியும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி இந்தியாவில் விளையும் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் 60 வயதை கடந்த பின் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்ட பிரிமீயத் தொகையை அரசே செலுத்த வேண்டும். மஞ்சள், மிளகாய், பிற பயிர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் வேண்டும் என்பவை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம் வழங்கியுள்ளோம். இதுகுறித்து பார்லிமென்டில் விவசாயிகளுக்காக அவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.