ADDED : ஜூலை 10, 2024 05:26 AM

மதுரை : மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்கம், டெக்கத்லான் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாவட்ட அளவிலான 11 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் பிரிவு பாட்மின்டன் போட்டிகள் நடந்தன.
துவக்க விழாவில் சங்கத் தலைவர் பாலசுப்ரமணி, மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் ராஜ்குமார் டேவிட், பொருளாளர் கார்த்திக் அருண், டெக்கத்லான் விளையாட்டு தலைவர் மனோகரன், மேலாளர் ஹரிஹரன் பங்கேற்றனர்.
போட்டி முடிவுகள்: 11 வயது ஒற்றையர் பிரிவில் அக் ஷரா லெனின், வேதீஸ்வரா முதலிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் தக்ஷனா ஸ்ரீ, ஹரித்ரா ஜோடி, ஹர்ஷவர்தன், சச்சின் ஜோடி முதலிடம் பெற்றனர்.
13 வயது ஒற்றையர் பிரிவில் அப்சனா, அப்துல்லா முதலிடம், இரட்டையர் பிரிவில் அப்சனா, அக்ஷரா லெனின் ஜோடி, அப்துல்லா பால் பில்லி ஜோடி முதலிடம் பெற்றனர்.
15 வயது ஒற்றையர் பிரிவில் அப்சனா, கெவின் அபினவ் ராஜ் முதலிடம், இரட்டையர் பிரிவில் கோமல், தனீஷா ஜோடி, கெவின் அபினவ் ராஜ், வீர் ஆர்யன் ஜோடி முதலிடம் பெற்றனர்.
17 வயது ஒற்றையர் பிரிவில் தான்யா, ஜெனே ரீகன் முதலிடம், இரட்டையர் பிரிவில் தீக்ஷா, வர்ஷா ஜோடி, சச்சின் ஜெனே ரீகன் ஜோடி முதலிடம் பெற்றனர். 19 வயது ஒற்றையர் பிரிவில் தான்யா, சச்சின் முதலிடம், இரட்டையர் பிரிவில் தான்யா, ஜெரோ ஞான பிளஸ்சி ஜோடி, சச்சின், ஜெனோ ரீகன் ஜோடி முதலிடம் பெற்றனர்.