Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மல்லிகையில் புழுக்கள் தாக்கம் கட்டுப்படுத்த வழிமுறைகள் இதோ

மல்லிகையில் புழுக்கள் தாக்கம் கட்டுப்படுத்த வழிமுறைகள் இதோ

மல்லிகையில் புழுக்கள் தாக்கம் கட்டுப்படுத்த வழிமுறைகள் இதோ

மல்லிகையில் புழுக்கள் தாக்கம் கட்டுப்படுத்த வழிமுறைகள் இதோ

ADDED : ஜூலை 10, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம் : மல்லிகையில் புழுக்கள் தாக்கத்தால் நிறம் மாறி பூக்கள் அழுகி வீணாகி, பெரும் இழப்பை ஏற்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மல்லிகை பயிரிட்டுள்ளனர். சமீப நாட்களாக மல்லிகை பூக்களில் கறை படிவதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். 'பூக்கும் பூக்களில் பாதிக்கு மேல் இதுபோன்று கறை உள்ளது. அந்த பூக்களை குப்பையில் தான் போடுகிறோம். இதனால் வருமானம் வெகுவாக குறைந்து விட்டது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

தீர்வுக்கான ஆலோசனை


தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி கூறியதாவது: மொக்கு துளைப்பான், பிணைக்கும் புழு, வெள்ளை ஈ, சிவப்பு பயிர்ச்சிலந்தி பூச்சிகளால் மல்லிகை அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வாரம் ஒரு முறை பாதிப்பு பூக்களை சேகரித்து அழிக்க வேண்டும். மல்லிகை செடி புதர் வகை பயிர் என்பதால் முறையாக கவாத்து செய்வது அவசியம். கவாத்து செய்தவுடன் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தல் வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்க, நன்றாக காய்ந்த 5 கிலோ வேப்பங்கொட்டையை துாளாக்கி, சாக்குத் துணியில் கட்டி 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வடிகட்டிய கரைசலை தண்ணீர் கலந்து 200 லிட்டராக மாற்றவும். இதனுடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குபொறி வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

பூக்க ஆராம்பித்த ஒரு வாரம் தொடங்கி பேசில்லஸ் உயிர் பூச்சானக் கொல்லியை ஒரு லிட்டருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் தெளிக்கலாம். ஒரு வார இடைவெளியில் ஸ்பைனோசேடு 0.5 மில்லி மற்றும் தைக்ளோப்ரைடு ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் மொக்கு புழு மற்றும் சிலந்தி கட்டுப்படுத்தப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us