ADDED : ஜூலை 07, 2024 02:27 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா, சின்னமநாயக்கன்பட்டி செல்வ விநாயகர், பாலமுருகன், முனியாண்டி கோயில் 3ம் ஆண்டு உற்ஸவம் 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் விநாயகர் முருகன் சுவாமிக்கு 9 வகை அபிஷேகங்கள், விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.