/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:28 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊத்துக்குழி ஐந்து வாசல் அய்யனார் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு விழா நடந்தது.
முதல் நாள் கன்னிமார், விநாயகர், அய்யனார், சடையாண்டி, மாவடியான் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை தெ.புதுாரில் இருந்து கிராமத்தினர் குதிரை, சுவாமி, காளை, பைரவர் உட்பட நேர்த்திக்கடன் சிலைகளை சிறப்பு பூஜை நடத்தி கண் திறப்பு செய்து வழிபட்டனர்.
பின் மேளதாளம், வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஊத்துக்குழி கிராமத்திற்கு எடுத்து வந்தனர். இன்று காலை குதிரை எடுத்து அய்யனார் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடக்கிறது. கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.