ADDED : ஜூலை 07, 2024 02:29 AM

மதுரை: மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கியது. தமிழக பள்ளி ஹாக்கி போட்டி ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரபு துவக்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தொழிலதிபர்கள் மணிராம்குமார், ஹயக்ரீவ், ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் கண்ணன், உறுப்பினர் முருகன் பங்கேற்றனர்.
லீக் போட்டியில் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி 5:0 என்ற கோல் கணக்கில் மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலை பள்ளியை வென்றது. திருநகர் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி 4:2 என்ற கோல் கணக்கில், டி.வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை வென்றது.
இன்றைய (ஜூலை 7) போட்டி முடிவுகள் சாம்பியனை தீர்மானிக்கும். மாலை 5:30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும்.