/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க மானியம் மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க மானியம்
மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க மானியம்
மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க மானியம்
மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க மானியம்
ADDED : ஜூலை 31, 2024 04:36 AM
மதுரை : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மக்காச்சோளம் பரப்பளவை அதிகரிக்க மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் துணை இயக்குநர் அமுதன் கூறியதாவது: மதுரையில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடியாகிறது. மதுரையில் திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லுாரில் 2242 எக்டேர் பரப்பளவிற்கு மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு விதை, உயிர் உரங்கள் அனைத்தும் சேர்த்து ரூ.12 ஆயிரம் செலவாகும். இதில் 50 சதவீத மானியம் பெறலாம். விதை, உயிர் உரம், வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் வேளாண் துறை மூலம் வழங்கப்படும் என்றார்.