ADDED : ஜூலை 31, 2024 04:36 AM
மதுரை, : மதுரை நியூ காலேஜ் ஹவுஸில் இலக்கிய இணையர் பேராசிரியர்கள் மோகன் - நிர்மலா அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.
பேராசிரியர் நிர்மலா தொகுத்த இலக்கிய இணையர் பேராசிரியர்கள் மோகன் -நிர்மலா மோகன் - சில நினைவுகள்' நுாலை மாவட்ட நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா வெளியிட்டார். பேரவை தலைவர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
கல்லுாரி முன்னாள் முதல்வர்கள் ராமசாமி, அருணகிரி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மன்றத் தலைவர் வரதராசன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாமிதுரை, கவிஞர்கள் ரவி, அமரன் பேசினர்.
மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ரவிசங்கர் நன்றி கூறினார். அசோக்ராஜ் தொகுத்து வழங்கினார்.