ADDED : ஜூலை 31, 2024 04:36 AM
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
மாவட்ட காப்பீடு திட்ட அலுவலர் அருண், தொடர்பு அலுவலர்கள் முத்துப்பாண்டி, வீரபாண்டியன், விக்னேஷ், ஜெயக்குமார், ராஜராஜேஸ்வரி, வி.ஏ.ஓ., மனோஜ், சமூக ஆர்வலர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.