Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 11, 2024 06:40 AM


Google News
மதுரை : ''அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். அரசு மருத்துவமனை காட்டிலும் தனியார் மருத்துவமனையில் 90 சதவீதம் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் உள்ளனர். இதில் ஆயிரம் பேர் தான் மகப்பேறு மருத்துவர்கள்.

இதனால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 10 ஆயிரம் பேர் அளவில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 2000 மகப்பேறு மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும், அப்படி இருந்தால் தான் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.

தமிழகத்தில் பிரசவங்களில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியம் கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதாவும், பழனிசாமியும் சுகாதாரத் துறையை சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால்தான் இந்நிலையை எட்ட முடிந்தது. 2 ஆயிரம் 'அம்மா மினி கிளினிக்' மூலம் ஆண்டுதோறும் 25 லட்சம் மக்களை பயனடைந்தனர். மத்திய அரசிடம் போராடி பெற்று தந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கூட தற்போது மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. பழனிசாமி செயல்படுத்திய திட்டங்களை, சாதனைகளை பின்பற்றி தங்கள் சாதனை போல தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர்.

அனைத்து நிலை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணிஉதவியாளர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us