ADDED : ஜூன் 26, 2024 07:25 AM
மதுரை : திருநெல்வேலியில் தேசியமய வங்கி ஒன்றின் தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சிலருடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து குறுகிய காலக் கடன் அனுமதித்து, மோசடியில் ஈடுபட்டு ரூ.2 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரத்து 431 வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2010 செப்.,26 ல் சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது.
அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.95 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.