/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஹிந்து மாணவர்களை வஞ்சிக்கும் சந்துரு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் ஹிந்து மாணவர்களை வஞ்சிக்கும் சந்துரு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ஹிந்து மாணவர்களை வஞ்சிக்கும் சந்துரு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ஹிந்து மாணவர்களை வஞ்சிக்கும் சந்துரு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ஹிந்து மாணவர்களை வஞ்சிக்கும் சந்துரு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2024 07:26 AM
மதுரை : ஹிந்து சமய மாணவர்களை மட்டும் வஞ்சிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என கோவையில் நடந்த ஹிந்து ஆலயப்பாதுகாப்பு இயக்க மாநில பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
இப்பொதுக்குழு மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பேரூர் ஆதீனத்தின் மரகதம் அம்மா ஆசி வழங்கினார். ஆன்மீக தமிழகம் என்ற தலைப்பில் முத்துசாமி பேசினார்.
மாநில பொது செயலாளராக ஆறுமுகநயினார்(அம்பாசமுத்திரம்), துணை தலைவர்களாக சுந்தரவடிவேல்(மதுரை), சாமிநாதன் (பழநி), மாநில பொருளாளராக ஆதிசேஷன் (மதுரை), மாநில செயலாளர்களாக வேல்மயில்(மயிலாடுதுறை), கார்த்திகேயன் (தென்காசி), சரவணன்(பெரம்பலுார்), நாகசுந்தரம்(சிவகங்கை) அறிவிக்கப்பட்டனர். மாநிலம் முழுதும் இருந்து 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களிடையே பரவியுள்ள தீய சிந்தனைகளை தடுக்க, அதற்கான காரணங்களை கண்டறிந்து தருமாறு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கையில் ஹிந்து சமூக மாணவர்களின் பழக்கவழக்கங்களை முற்றிலும் ஒழிப்பதாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெற்றியில் சமய சின்னங்களை அணிவது, கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்ட கயிறுகளை கட்டுவது, திருவிழா காலங்களில் நேர்த்திக்கடன் காப்பு கட்டுவது என அனைத்தும் தடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து சமுதாய அமைப்புகள் துவங்கும் பள்ளிகள் மீது தேவையற்ற கட்டுப்பாடு என ஹிந்து விரோத அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிற மத மாணவர் அடையாளங்களை குறிப்பிடாமல் ஹிந்து மாணவர்களை மட்டும் வஞ்சிக்கும் இந்த அறிக்கை மாற்றத்தை உருவாக்காது. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அப்புறப்படுத்தப்படாததை இயக்கம் கண்டிக்கிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் கோயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு தொல்லை கொடுப்பதை நிறுத்திட வேண்டும்.
கோயில்களின் நலன் கருதி மதில் சுவர்களையொட்டியுள்ள கடைகளை பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.