/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இளைஞர் கொலையில் தந்தை சகோதரரை தேடும் போலீஸ் இளைஞர் கொலையில் தந்தை சகோதரரை தேடும் போலீஸ்
இளைஞர் கொலையில் தந்தை சகோதரரை தேடும் போலீஸ்
இளைஞர் கொலையில் தந்தை சகோதரரை தேடும் போலீஸ்
இளைஞர் கொலையில் தந்தை சகோதரரை தேடும் போலீஸ்
ADDED : ஜூன் 05, 2024 02:11 AM
பேரையூர்,: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலப்பச்சேரி இடையபட்டியைச் சேர்ந்த வாழவந்தான் இளைய மகன் செல்லப்பாண்டி 28.
இவர் நேற்று வீட்டில் தலை, முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் வி.ஏ.ஓ., யாஸ்மினிடம் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., புகாரின்படி போலீசார் விசாரித்தார்.
போலீசார் கூறியதாவது: ஜூன் 3 இரவு செல்லப்பாண்டியுடன், அண்ணன் தங்கப்பாண்டி, தந்தை வாழவந்தான் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்டுள்ளது. யாரும் அவர்களை விலக்கி விடச்செல்லவில்லை. சம்பாதிக்கும் பணத்தை குடித்து வீண் செலவு செய்கிறாய். உன்னால் குடும்பம் கஷ்டப்படுகிறது. இதனால் ஊரில் அசிங்கப்பட வேண்டியுள்ளது. உன்னால் தான் போலீஸ் வழக்கு விசாரணைக்கும் அலைய வேண்டியுள்ளது என 2 பேரும் செல்லப்பாண்டியுடன் தகராறு செய்துள்ளனர். பின் செல்லப்பாண்டி, என்னை அடித்து கொன்று விடாதீர்கள் என கெஞ்சும் சத்தமும் கேட்டதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
வாழவந்தானும், தங்கப்பாண்டியன் வீட்டில் இருந்து சென்றதாக கிராமத்தினர் தெரிவித்தனர். வீட்டுக்குள் செல்லப்பாண்டி இறந்து கிடந்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தங்கப்பாண்டி, அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.