/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் மா.கம்யூ., வெற்றிக்கு கை கொடுத்த மேலுார், கிழக்கு தொகுதிகள் மதுரையில் மா.கம்யூ., வெற்றிக்கு கை கொடுத்த மேலுார், கிழக்கு தொகுதிகள்
மதுரையில் மா.கம்யூ., வெற்றிக்கு கை கொடுத்த மேலுார், கிழக்கு தொகுதிகள்
மதுரையில் மா.கம்யூ., வெற்றிக்கு கை கொடுத்த மேலுார், கிழக்கு தொகுதிகள்
மதுரையில் மா.கம்யூ., வெற்றிக்கு கை கொடுத்த மேலுார், கிழக்கு தொகுதிகள்
ADDED : ஜூன் 05, 2024 02:10 AM
மதுரை, : மதுரை தொகுதியில் தி.மு.க., கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் 4,30,323 ஓட்டுக்கள் பெற்று 2,09,409 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் அமைச்சர் மூர்த்தி பொறுப்பு வகித்த மேலுார், மதுரை கிழக்கு ஆகிய இரண்டில் மட்டும் 1,84,459 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை வேட்பாளராக வெங்கடேசன் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரத்தில் அவருக்கு ஆரம்பத்தில் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து 'அனைத்து தொகுதியிலும் தி.மு.க., வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர் என நினைத்து மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
சரியாக பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த பின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்டினர்.
மதுரை தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மேலுார், மதுரை கிழக்குக்கு அமைச்சர் மூர்த்தியும், நகர் பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு ஆகிய 4 தொகுதிகளுக்கு நகர் செயலாளர் தளபதியும் பொறுப்பு வகித்தனர்.
இதில் மூர்த்திக்கு உட்பட்ட மேலுார் (69,258), கிழக்கு (1,15,201) தொகுதிகளில் இருந்து 1,84,459 ஓட்டுக்கள் வெங்கடேசன் பெற்றுள்ளார். நகருக்கு உட்பட்ட நான்கு தொகுதிகளிலும் சேர்ந்து 2,43,742 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். குறிப்பாக மதுரை வடக்கு (59,955), தெற்கு (45,783) தொகுதிகளில் வெங்கடேசனுக்கு ஓட்டுக்கள் குறைந்துள்ளது.