ADDED : ஜூன் 05, 2024 02:20 AM

விருதுநகர் : விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் -தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
24 சுற்றுகளின் எண்ணிக்கை நேற்றிரவு 8:15 மணியுடன் நிறைவடைந்த நிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இன்று அதிகாலை 12:55 வரை நடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 ஓட்டுக்கள் பெற்று 4379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.