ADDED : ஜூலை 09, 2024 05:28 AM
மேலுார்: நாவினிபட்டி மெயின்ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றிய மின் ஊழியர்கள், அதே கிராமத்தில் உள்ள வைத்தியநாதர் காலனிக்கு கொண்டு சென்று பொருத்தினர்.
பிறகு அங்கிருந்த டிரர்ன்ஸ்பார்மரை கழற்றி வேனில் ஏற்றியபோது கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பிறகு வேறுவழியின்றி மின் ஊழியர்கள் இரண்டு டிரான்ஸ்பார்மரை அதே இடங்களில் அமைத்தனர்.