துவக்க விழா
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 'ப்ளூ பிரைன் கிளப்' துவக்க விழா நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். கிளப் செயல்பாடுகள் குறித்து துறை தலைவர் கார்த்திகா பேசினார். கிளப் ஜனாதிபதியாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் கீர்த்திவாசன், துணை ஜனாதிபதியாக யோகராஜ், செயலராக சவுமியா, துணை செயலராக நரசிம்மராஜா, பொருளாளராக தீபக் நியமிக்கப்பட்டனர். பேராசியர்கள் சுஜித்ரா, வனிதா பேசினர். மாணவர் இன்பராஜ் நன்றி கூறினார்.
ஆலய பிரவேச நினைவு நாள்
மதுரை: மீனாட்சியம்மன் கோயில் பிரவேச நினைவு நாளின் 85 வது ஆண்டு விழா மீனாட்சி அரசு கல்லுாரியில் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் சந்திரா வரவேற்றார். முதல்வர் வானதி தலைமை வகித்தார். காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் பேசுகையில், இந்தியாவிலேயே முதன்முதலில் தடையை மீறி ஒடுக்கப்பட்டோர் கோயிலுக்குள் சென்ற இடம் மதுரை தான். இக்கல்லுாரி வளாகத்தில் உள்ள சிவகங்கை அரண்மனையில் காந்தி தங்கி இருந்தது வரலாற்று நிகழ்வு என்பதால் அந்த அரண்மனையை பாதுகாக்க வேண்டும்'' என்றார் . மியூசிய பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர். கணிதத்துறை தலைவர் முத்துபாண்டியன் நன்றி கூறினார்.