ADDED : ஜூன் 30, 2024 04:58 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் கிளை தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் அய்யங்காளை வரவேற்றார்.
இணைச் செயலாளர்கள் பழனி, அக்னி, பாண்டி, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் முத்துசாமி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன் நீதிராஜா, மா. கம்யூ., ராமர் பேசினர்.
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். உசிலம்பட்டியில் அரசு மகளிர் கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.
செயற்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.