ADDED : ஜூன் 30, 2024 04:58 AM
மதுரை : தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் பொதுச் செயலாளர் கார்த்திகேயன் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை புதுடில்லியில் சந்தித்தார்.
தென்கொரியாவில் நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் பளுதுாக்கும் போட்டி உட்பட பல்வேறு தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்றதற்கு அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது இந்தாண்டு டிசம்பரில் அசோசியேஷன் சார்பில் சென்னையில் நடக்கவுள்ள அகில இந்திய மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிக்கு தலைமை தாங்குமாறு மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.