/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வருவாய்த்துறை கூட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் முடிவு வருவாய்த்துறை கூட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் முடிவு
வருவாய்த்துறை கூட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் முடிவு
வருவாய்த்துறை கூட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் முடிவு
வருவாய்த்துறை கூட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் முடிவு
ADDED : ஜூன் 17, 2024 01:06 AM
மதுரை: வருவாய்த்துறையில் உள்ள பொதுவான கோரிக்கைகளை வென்றெடுக்க ஒத்த கருத்துடைய கிராம நிர்வாக அலுவலர்கள்,உதவியாளர்கள் சங்கங்களை ஒன்றிணைத்து 'வருவாய்த்துறை கூட்டமைப்பு' ஏற்படுத்த வருவாய் அலுவலர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில தலைவர் எம்.பி.முருகையன், செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் சோமசுந்தரம்நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அம்மாவட்ட நிர்வாகிகள் அருள்மொழி வர்மன், செயலாளர் திருமால், மதுரை தலைவர் கோபி, செயற்குழு உறுப்பினர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் சங்க வைரவிழா ஆண்டை முன்னிட்டு சென்னையில் ஆக.2, 3ல் மாநில மாநாடு நடத்துவது, இதில் முதல்வர் ஸ்டாலின், தொழிற்சங்க பிரமுகர்களை பங்கேற்க அழைப்பு விடுப்பது என முடிவு செய்தனர்.
வருவாய் அலுவலர்களின் பணித்தன்மை, பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வலியுறுத்த வேண்டும். வைரவிழாவையொட்டி மாநிலம்முழுவதும் 60 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது, அரசு உறுதியளித்தபடி வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் இடையேயான பணி முதுநிலை தீர்வை அரசு உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேலான அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
ஒத்த கருத்துடைய வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து 'வருவாய்த்துறை கூட்டமைப்பை' உருவாக்குவது. ஆண்டுதோறும் ஜூலை 1ல் வருவாய்த்துறை தினம் அனுசரிப்பது. பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.