ADDED : ஜூலை 03, 2024 05:57 AM
திருமங்கலம் : மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருமங்கலம் வக்கீல் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
வக்கீல் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராம்குமார், பொருளாளர் விக்னேஷ்குமார் மற்றும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.